விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து அ.தி.மு.க.வினர் (அம்மா) பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என்று நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கோலியனூர் ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.(அம்மா)வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தனுசு, மாவட்ட மருத்துவ அணி தலைவர் கலைச்செல்வம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கமருதீன், நகரமன்ற முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில், பாலசுப்பிரமணியன், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் சம்சுதீன்சேட், ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், சேகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணன், பேரவை கிளை செயலாளர் கமல்ராஜ், நிர்வாகிகள் பவுல்ராஜ், பொன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விக்கிரவாண்டி

இதேபோல் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் பூர்ணராவ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

இதில் கூட்டுறவு சங்க தலைவர் பலராமன், மாவட்ட இணை செயலாளர் மலர்விழி, வக்கீல் அணி செயலாளர் முருகன், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெயக்கொடி ஏழுமலை, நகர இலக்கிய அணி செயலாளர் கண்ணன், கூட்டுறவு சங்க இயக்குனர் வாசு, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செங்கேணி அய்யனாரப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com