வழக்கில் சாட்சி சொல்ல வராத திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு

கொள்ளை வழக்கில் சாட்சி சொல்ல வராத திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் சாட்சி சொல்ல வராத திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய மாரியம்மன் கோவில் மனோன்மணியம் நகர் ஆடக்காரத்தெருவை சேர்ந்தவர் மதிவாணன். இவருடைய மனைவி செல்வநாயகி(வயது 63). மகள் கனிமொழி(31). கடந்த 29.5.2011 அன்று இரவு செல்வநாயகி, வீட்டின் சமையல் அறையில் இருந்தார். கனிமொழி வீட்டின் முன் அறையில் உள்ள மேஜையில் சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கனிமொழியையும், செல்வநாயகியையும் மிரட்டி அவர்களுடைய கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துச்சென்று விட்டனர். இதுகுறித்து செல்வநாயகி, தஞ்சை கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அம்மன்பேட்டை பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் வடிவேல், தஞ்சை மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த மாதவன், ரஜினி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தஞ்சை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகி சாட்சி அளிக்குமாறு அப்போது கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக (பொறுப்பு) பணியாற்றி வந்த சச்சிதானந்தத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் சச்சிதானந்தத்திற்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி நேற்று உத்தரவு பிறப்பித்தார். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சச்சிதானந்தம் பதவி உயர்வு பெற்று தற்போது திருச்சி கண்டோன்மென்ட் சரக போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com