காங்கிரசின் வாரிசு அரசியல் கலாசாரம் நமக்கு தேவை இல்லை

காங்கிரசின் வாரிசு அரசியல் கலாசாரம் நமக்கு தேவை இல்லை என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார்.
காங்கிரசின் வாரிசு அரசியல் கலாசாரம் நமக்கு தேவை இல்லை
Published on

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின விழா பெங்களூரு பொம்மனஹள்ளியில் உள்ள விஜயா வங்கி காலனியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி அனந்தகுமார் கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களிடம் திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் தான் அதிகமாக உள்ளது. அவர்களின் வாரிசு அரசியல் கலாசாரம் நமக்கு தேவை இல்லை. மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் கட்சிகளின் ஆட்சி தான் நமக்கு தேவை.

ராகுல் காந்தி, தாய்லாந்து, பாங்காங் உள்ளிட்ட நாடுகளை சுற்றும் அரசியல்வாதி. இத்தகைய அரசியல்வாதிகள் நமக்கு வேண்டாம். தாய்நாட்டில் சேவையாற்றுபவர்கள் தான் நமக்கு வேண்டும். கர்நாடகத்திற்கு என்று தனி வரலாறு, பண்பாடு உள்ளது. இதை ரவுடி அரசியல்வாதிகளின் கைகளில் கொடுத்து நாசப்படுத்தக்கூடாது. கர்நாடகத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com