மாநில அந்தஸ்துபெற தொடர்ந்து முயற்சிப்போம் - நாராயணசாமி உறுதி

மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து முயற்சிப்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.
மாநில அந்தஸ்துபெற தொடர்ந்து முயற்சிப்போம் - நாராயணசாமி உறுதி
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

அன்பழகன்:- நாடாளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக வைத்திலிங்கம் எம்.பி. கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்று கூறியுள்ளார். மாநில அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பாக மத்திய அரசு உள்ளது. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

அரசு கொறடா அனந்தராமன்:- இதற்காக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போட வேண்டும்.

அன்பழகன்:- இதேநிலை நீடித்தால் புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு துறையாகவே இருக்க நேரிடும். நாம் மாநில அந்தஸ்தை பெறவேண்டும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- நாடாளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை மந்திரி அந்த பதிலை அளித்துள்ளார். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று உள்துறை மந்திரி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தினோம். அப்படி இருந்தும் மத்திய அரசு புதுவை மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மத்திய மந்திரியின் பதில் வருத்தத்தை அளிக்கிறது. இருந்தபோதிலும் மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com