ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூரில் உள்ள காமராஜர் சிலை அருகே போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். அப்போது அவர் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும்போது சாலை விதிகளை பின்பற்றி சென்றால் விபத்துகளை தவிர்க்கலாம்.

வாகனத்தை ஓட்டும் போது கண்டிப்பாக செல்போன் பேச கூடாது என்று அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம், கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் சாலை விதிகளை கடைபிடித்து நடக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கினார். ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்துக்களை வழங்கி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார், பன்னீர்செல்வம், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com