அங்கன்வாடி ஊழியர் தேர்வு ரத்தானது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி

அங்கன்வாடி ஊழியர்கள் தேர்வு ரத்தானது ஏன்? என்று அன்பழகன்எம்.எல்.ஏ.கேள்வி எழுப்பினார். புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சிதலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அங்கன்வாடி ஊழியர் தேர்வு ரத்தானது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி
Published on

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவாஎம்.எல்.ஏ.ஆகியோர்தொழில் முதலீட்டாளைர்களை சந்திக்க சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர்.இந்த பயணத்தின்மூலம் வெளிநாட்டு முதலீடு எவ்வளவு வந்துள்ளது? என்பதை விளக்க வேண்டும். அவர்களது பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில்அனுமதி பெறாமல்வெளிநாடுசென்றதாக கவர்னர்கூறியுள்ளார். புதுவையில் புதிய தொழிற்கொள்கை வகுத்த பின் ஒரு தொழிற்சாலை கூட புதிதாக வரவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையைத்தான் இழந்துள்ளனர்.

புதுவையில் சட்டம்- ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளோம். இதற்கும் கவர்னர்தான் காரணம் என்று முதல்-அமைச்சர் கூறுவாரா? பிரச்சினைகளுக்கு யார் மீதாவதுபழிபோட்டுதப்பிக்க அரசுமுயற்சி செய்கிறது.

புதுவை மக்கள் அமைதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. சட்டம்ஒழுங்கினை சீரமைக்கமுடியாமல் பலகீனமான அரசாக புதுச்சேரி அரசு உள்ளது.

அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களை நிரப்ப மகளிர் மற்றும் குழந்தைகள்மேம்பாட்டுத்துறைஅறிவிப்பு வெளியிட்டது. ஆனால்இந்த தேர்வுதிடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

அது ரத்தானது ஏன்? என்று தெரியவில்லை என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கூறுகிறார்.நிர்வாக திறமையின்மை, மோதல் காரணமாக இந்த அரசுஅனைத்து துறையிலும்தோல்வி கண்டுவருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஒருஅரசு பணியிடம்கூட நிரப்பப்படவில்லை.

இவ்வாறு அன்பழகன்எம்.எல்.ஏ.கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com