ஜனாதிபதி வருவதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (வெள்ளிக்கிழமை) வேலூருக்கு வருவதையொட்டி பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனையொட்டி வாகன போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி வருவதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
Published on

வேலூர்,

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை வேலூருக்கு வருகிறார். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து சென்னை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு வேலூர் வருகிறார். அவரது ஹெலிகாப்டர் ஸ்ரீபுரம் பொற்கோவில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறது.

மதியம் 12.30 மணியளவில் சி.எம்.சி. மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். பின்னர் மாலையில் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் இருதய சிகிச்சை பிரிவை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மாலை 5 மணியளவில் ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரன் மேற்பார்வையில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக பிற மாவட்டங்களில் இருந்தும் வேலூருக்கு போலீசார் வர உள்ளனர்.

மேலும் ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com