

மும்பை,
நீண்ட தூர ரெயில்களும் இதேபோல இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பலரும் டிக்கெட் எடுக்காமல் ரெயில்களில் ஓசிபயணம் செய்து ரெயில்வேக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு ரெயிலில் ஓசிபயணம் செய்பவர்களை பிடித்து டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர். இதில் கடந்த மாதத்தில் மட்டும் ரெயிலில் ஓசிபயணம் செய்ததாக 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.9 கோடியே 72 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.