மாமல்லபுரத்தில் மகளிர் தினவிழா

இந்திய அளவில் மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விமானப்படை வீரர்களின் மனைவிமார் 500 பேர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தேசிய அளவிலான தனியார் அறக்கட்டளை ஏற்பாட்டின்பேரில் ஒன்றாக கூடி மகளிர் தினவிழா கொண்டாடினர்.
மாமல்லபுரத்தில் மகளிர் தினவிழா
Published on

மாமல்லபுரம்,

விழாவில் அவர்கள் 250 பேர் வீதம் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு தென் ஆப்பிரிக்கா தபேலா கலைஞர்கள் மூலம் தபேலா போட்டி நடத்தப்பட்டது. அதிக ஒலி எழுப்பிய குழுவுக்கு ஒவ்வொரு இசையின் மூலம் மதிப்பெண் வழங்கப்பட்டது. விமானப்படை வீரர்களின் மனைவிகள் அனைவரும் தங்களுடன் ஒரு தபேலா கொண்டு வந்திருந்தனர். தபேலா இசை மூலம் அரங்கமே அதிர்ந்தது. தென் ஆப்பிரிக்கா தபேலா கலைஞர்கள் உற்சாக மிகுதியில் தபேலா வாசிப்புடன் பாடல்கள் பாடி நடனமாட, அந்த பாடல் இசைக்கு ஏற்ப அனைத்து பெண்களும் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து வந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர். விழாவின் முடிவில் விமானப்படை வீரர்களின் மனைவிமார் 50 பேர் சிகை அலங்கார கலைஞர் மூலம் தங்கள் முடியை வெட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலை முடி உதிர்ந்த பெண் நோயாளிகளுக்கு வழங்கி தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். தங்களுக்குள் மகளிர் தின வாழத்துகளை தெரிவித்து கொண்ட அவர்கள் ஒவ்வொரு குழுவாக நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com