நீலகிரியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம்: வானதி சீனிவாசன்

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் காஞ்சீபுரம் வந்தார்.
Published on

காந்தி ஜெயந்தியையொட்டி காஞ்சீபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் தேரடி பகுதியில் உள்ள காதி அங்காடியில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று விற்பனை செய்யும் பொருட்களை பார்வையிட்டு பொதுமக்களை வாங்க ஊக்கப்படுத்தினார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென தெரிவித்து வந்த தி.மு.க., தற்போது ஆட்சிக்கு வந்தபின்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம். புலிகளுடைய எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது.

அதை ஒற்றைப்புலி என்பதை தாண்டி ஒட்டுமொத்த விஷயமாக கருத வேண்டும். தமிழ்நாடு வனத்துறை மிக கவனமாக செயல்பட்டு புலியை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com