

புதுடெல்லி,
அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ.யும், முறைகேடான பணப்பரிவர்த்தனை சட்டத்தில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தன. இதில் கடந்த மாதம் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் ரூ.3.68 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியது. இப்போது மேலும் ரூ.1.94 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் பண்ணை வீடு ஆகியவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.