ஜன் தன் கணக்குகள் மூலம் 30 கோடி குடும்பங்கள் பயன்: பிரதமர் மோடி

ஜன் தன் கணக்குகள் மூலம் 30 கோடி குடும்பங்கள் பயன் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜன் தன் கணக்குகள் மூலம் 30 கோடி குடும்பங்கள் பயன்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி

இக்கணக்குகள் துவங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து மூன்றாவது ஆண்டு நிறைவு பெற்றதை ஒட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார். இக்கணக்குகளில் ரூ 65,000 கோடி வைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜன் தன் கணக்குகள் மட்டுமின்றி காப்பீடு திட்டங்கள், ரூ பே அட்டைகள் போன்றவற்றின் மூலமும் மக்கள் பயனடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். காப்பீடு திட்டங்கள் ஏழை மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இக்கணக்குகளின் தொகை பல நாட்டு மக்கள் தொகையை விட அதிகம் என்றும், இதனை உலக நாடுகள் பலவும் உற்று நோக்குவதாகவும் அவர் கூறினார்.

கடை நிலையிலுள்ள ஏழை மனிதனும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள இத்திட்டம் வழி வகுத்துள்ளது என்றும் கூறினார் மோடி. தனது மாதாந்திர மனதிலிருந்து பேசும் உரையின் ஒரு பகுதியாக இத்திட்டத்தைப் பற்றி அவர் விவரித்தார்.

கணக்குகள் இருப்பதால் வங்கிக்கு செல்லும் ஏழை மனிதர் சேமிக்கவும் பழகுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் மோடி. ரூ பே அட்டை சாதாரண மனிதர்களை பெருமிதம் கொள்ளச் செய்கின்றன என்றும் அவர் கூறினார்.

குடும்பத் தலைவர் அகால மரணமடைந்தால் ரூ 2 லட்சம் ஒரு சில தினங்களில் அக்குடும்பங்களுக்கு கிடைக்கிறது. இது ஒரு ரூபாய் காப்பீட்டு தொகையின் கீழ் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் முத்ரா வங்கிக் கடன் பல எளிய மக்கள் தங்கள் தொழிலின் மூலமாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இக்கடன்களை அவர்கள் எவ்வித உத்தரவாதங்கள் இன்றிப் பெறமுடிகிறது என்பதையும் பிரதமர் மோடி எடுத்துக்கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com