“பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு சென்றுவிடுவதா..” - வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்


“பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு சென்றுவிடுவதா..” - வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்
x

கடந்த இரண்டு மாதங்களாக புலிகளும், சிறுத்தைகளும் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைந்து, கால்நடைகளை கொன்று வருவதாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என ஏழு பேரையும் புலியை பிடிக்க அமைத்த கூண்டில் அடைத்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து , கிராமத்தினர் கூறுகையில், “இரண்டு மாதங்களாக வன விலங்குகளால் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். புலி குறித்து தகவல் தெரிவித்தும் தாமதமாக வந்தது ஏன்?' என கேள்வி எழுப்பினர்.

1 More update

Next Story