மும்பையில் பாலியல் வழக்கில் சிக்கிய 9 வயது சிறுவன்

மும்பையில் 9 வயது சிறுவன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

தானே,

மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை சம்பவத்தன்று விளையாட அழைத்து சென்றான். அப்போது அவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

வீட்டிற்கு வந்த சிறுமி தனது மர்ம உறுப்பில் வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தாள். இது பற்றி பெற்றோர் விசாரித்தபோது, விளையாட அழைத்து சென்ற 9 வயது சிறுவன் தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது பற்றி சிறுமியின் பெற்றோர் வித்தல்வாடி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் சிறுவன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுவரை சிறுவன் கைது செய்யப்படவில்லை என்றும், மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com