உல்லாசத்திற்கு அழைத்து.. வாலிபர்களின் அந்தரங்கங்களை.. வினோதமாக ரசித்த பெண்; திடுக்கிடும் தகவல்


உல்லாசத்திற்கு அழைத்து.. வாலிபர்களின் அந்தரங்கங்களை.. வினோதமாக ரசித்த பெண்; திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 15 Sept 2025 10:31 AM IST (Updated: 15 Sept 2025 11:34 AM IST)
t-max-icont-min-icon

ரஷ்மி அந்த வாலிபரை, நாம் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

பத்தனம்திட்டா அருகே 2 வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து பணம்-செல்போனை பறித்துவிட்டு மர்ம உறுப்பில் ‘ஸ்டேப்ளர் பின்' அடித்து சித்ரவதை செய்த தம்பதியை போலீசார் கைதுசெய்தனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச்சேர்ந்தவர் ஜெயேஷ்(வயது29). இவருடைய மனைவி ரஷ்மி(23). இவருக்கு, ஆலப்புழையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ரஷ்மி அந்த வாலிபரை, நாம் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த வாலிபர், கடந்த 1-ந்தேதி ரஷ்மியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர், ரஷ்மியிடம் நெருங்கி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஜெயேஷ், மனைவியுடன் சேர்ந்து அந்த வாலிபரை மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறித்தனர். தொடர்ந்து வாலிபரின் கைகளை கட்டித்தொங்கவிட்டு மர்ம உறுப்பில் 26 ‘ஸ்டேப்ளர் பின்’களை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

மேலும், அவரது கை விரல் நகங்களை பிடுங்கினர். இதில் வலி தாங்கமுடியாமல் அலறினார். உடனே அவரது வாயை துணியால் கட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குக்கொண்டு போட்டுவிட்டுச்சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர், வாலிபரின் முனகல் சத்தம்கேட்டு அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரன்மூளா போலீசார், வாலிபர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயேஷ், அவரது மனைவி ரஷ்மியை கைதுசெய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாணையில், பகீர் தகவல்கள் வெளியானது. அதாவது பணத்துக்காக ரஷ்மி வாலிபர்களை குறிவைத்து முதலில் ஆசைவார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து பணம், செல்போன் உள்னிட்டவற்றை பறித்துள்ளார். மனைவிக்கு உடந்தையாக ஜெயேஷ் இருந்துள்ளார்.

கடந்த 5-ந்தேதி ஓணம்விழா அன்று ரான்னியை சேர்ந்த தன்னுடன் வேலைபார்த்து வந்த ஒரு வாலிபரையும் ரஷ்மி வீட்டிற்கு அழைத்து அவரிடம் இருந்தும் பணத்தை பறித்து கட்டிதொங்கவிட்டு சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆரன்முளா போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story