இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காந்தி நகர்,
இந்தியாவின் 76வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் ஹரமி நலா பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லைப்பாதுகாப்புப்படையினர் இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் படினி மாவட்டத்தை சேர்ந்த ஹாவர் என்பது தெரியவந்தது. அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






