வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி

நிதி நிலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி
Published on

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

கவர்ச்சிகர அறிவிப்புகள் பெரிதாக எதுவும் இல்லாத பட்ஜெட்டாக இது அமைந்திருந்தது. மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “வளர்ச்சிக்கான இந்தியா என்ற பயணத்தில் இந்த பட்ஜெட் வலுசேர்க்கும். தொழில் துறையினரின் முன்னேற்றத்துக்காக பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பெருக்கும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிதி நிலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும். பல முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன. நாட்டுமக்களின் தொழில் திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா வளர்ச்சி இந்த பட்ஜெட் மூலம் முக்கியத்துவம் பெறுகிறது. மாணவிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கும் விடுதிகள் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எதிர்காலத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ததாக நிர்மலா சீதாராமனை பாராட்டுகிறேன். இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com