உ.பி.: மந்திரியின் கான்வாய் வாகனத்தை கால்நடைகளை கொண்டு தடுத்த 90 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் மந்திரியின் கான்வாய் வாகனத்தை கால்நடைகளை கொண்டு தடுத்த 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பரேலி,

உத்தரப் பிரதேச மாநில கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி தரம்பால் சிங், கடந்த வியாழக்கிழமை கூடுதல் தலைமைச் செயலாளர் ரஜ்னீஷ் துபேயுடன், அயோன்லா தாலுகாவில் உள்ள குர்கானில் ரூ.9.14 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள விலங்கு பாலிகிளினிக்கின் பூமி பூஜைக்கு சென்றார்.

அப்போது தெரு மாடுகளின் பிரச்சனையை அவரது கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் அவரது கான்வாய் வாகனத்தை உள்ளூர் மக்கள் கால்நடைகளை கொண்டு வந்து தடுத்தனர். இதில் அமைச்சரின் கான்வாய் வாகனம் சுமார் 40 நிமிடம் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து அப்பகுதியில் நிலத்தை கண்டறிந்து விரைவில் பசு காப்பகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தரம்பால் சிங் கிராம மக்களுக்கு உறுதியளித்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக கால்நடை மருத்துவ அதிகாரி சஞ்சய் குமார் சர்மாவின் புகாரின் பேரில், அடையாளம் தெரியாத 90 பேர் மீது இன்று ஐபிசி பிரிவு 341-ன் கீழ் (எந்த நபரையும் தவறாகக் கட்டுப்படுத்துதல்) எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com