நாடு முழுவதும் காலனி ஆதிக்க பெயர்கள் மாற்றம்; இந்திய ராணுவம் நடவடிக்கை

ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
நாடு முழுவதும் காலனி ஆதிக்க பெயர்கள் மாற்றம்; இந்திய ராணுவம் நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின்போது வைக்கப்பட்ட பெயர்களை விட்டு விட்டு, அவற்றிற்கு பதிலாக தேசத்தின் வீரதீர செயல்களுக்கான விருது வென்றவர்கள், போர் நாயகர்கள் மற்றும் தனித்துவம் வாய்ந்த ராணுவ தலைவர்கள் போன்ற தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை வைக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இதன்படி நாடு முழுவதும் பூங்காக்கள், பயிற்சி பகுதிகள், விளையாட்டு மைதானங்கள், நுழைவு வாசல்கள், ஹெலிபேட்கள் உள்பட 124 சாலைகள், 77 காலனிகள், 27 கட்டிடங்கள் மற்றும் பிற ராணுவ அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டன.

Also Read
மேகாலயா: சுரங்க வெடிவிபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
நாடு முழுவதும் காலனி ஆதிக்க பெயர்கள் மாற்றம்; இந்திய ராணுவம் நடவடிக்கை

இந்தியாவின் சொந்த வரலாறு, நெறிமுறைகள் மற்றும் ராணுவ பாரம்பரியங்கள் ஆகியவற்றில் வேரூன்றியுள்ள அமைப்பின் அடையாளம் வலுப்படுவதற்கான நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதத்திலும் இந்த நடவடிக்கை அமைந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com