புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ந்தேதி தொடங்கியது. ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை 2 கட்டங்களாக கூட்டத்தொடரை நடைபெற உள்ள சூழலில், தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் கடந்த 2 மற்றும் 3 ஆகிய நாட்களிலும், இன்றும் நடந்தது. எனினும், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தேர்தல் தொடர்பாக நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதனால், அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்படும் சூழல் எழுந்தது. இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 8 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய விசயங்கள் பற்றி ஆலோசனை செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.
இதற்காக மேலவையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் நாளை காலை 10 மணியளவில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ஒன்று கூடி ஆலோசிக்க உள்ளனர். அதில், கூட்டத்தொடரில் அடுத்தடுத்து மேற்கொள்ள உள்ள விசயங்களை பற்றி அவர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணியளவில் பதிலளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மற்றும் இடையூறுகளால், அவை 5-ந்தேதி வரைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.