ஊழல் குறியீடு பட்டியல்; இந்தியா எந்த இடம்?

பட்டியலில் முதல் 3 இடங்களை டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் முறையே கைப்பற்றியது.
ஊழல் குறியீடு பட்டியல்;  இந்தியா எந்த இடம்?
Published on

புதுடெல்லி,

ஜெர்மனி தலைநகர் பெர்லினை தளமாக கொண்டு 'டிரான்ஸ்பரன்சி இன் டர்நேஷனல்' என்ற அரசு சாரா சர்வதேச நிறுவனம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் உலகநாடுகளின் ஊழல் தொடர்பான பட்டியலை அது வெளியிட்டு வருகிறது. 182 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு இந்த புள்ளிபட் டியல் வெளியிடப்படுகிறது.அதன்படி நேற்று அந்த நிறுவனம் ஊழல் ஊடுருவலுக்கான நாடுகளின் 2025-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டது.

இதில் இந்தியாவுக்கு 91-வது இடம் தரப்பட்டுள்ளது. பட்டியலில் முதல் 3 இடங்களை டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் முறையே கைப்பற்றியது. கடந்த 2024-ம் ஆண்டில் இந்தியா 96-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது 5 இடங்கள் முன்னேறி 91-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் அந்த பட்டியலில் உலகின் 90 சதவீதம் கொலைகள் பிரேசில், இந்தியா, மெக்சிகோ, பாகிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளில் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com