இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

மக்களவையில் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆகியோர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது.

இந்தநிலையில், இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மக்களவையில் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆகியோர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இதனிடையே நேற்று சீனா ஊடுருவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com