பிரதமர் மோடி மக்களவைக்கு வராதது ஏன் தெரியுமா? ராகுல் காந்தி கடும் தாக்கு

பட்ஜெட் குறித்த விவாதத்தை நடத்தவும் அரசாங்கம் பயப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.

பிரதமர் மோடி மக்களவைக்கு வராதது ஏன் தெரியுமா? ராகுல் காந்தி கடும் தாக்கு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:- முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனேவின் புத்தக விவகாரத்துக்கு பயந்துதான் பிரதமர் மோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர் மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளிக்க மக்களவைக்கு வர வில்லை. உறுப்பினர்களிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்தால் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டியதுதானே. நரவனே புத்தகம் வெளியிடப்பட்டு விட் டது.

அதன் ஒரு பிரதி தங்களிடம் இருக்கிறது. அது வெளியிடப்படவில்லை என்று ராஜ்நாத் சிங் தவறாக சொல்கிறார். அவர்களின் உறுப்பினர் ஒருவர் புத்தகங்களை காட்டி இழிவாக பேசினார். ஆனால் என்னை பேசவிட வில்லை. அமெரிக்க ஒப்பந்தம், அது செய்யப்பட்ட விதம் மற்றும் விவசாயி களின் மீதான அதன் தாக்கம் ஆகிய விவகாரங்கள் காரணமாக பட்ஜெட் குறித்த விவாதத்தை நடத்தவும் அரசாங்கம் பயப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com