அனில் அம்பானி, மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

டினா அம்பானியிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

அனில் அம்பானி, மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
Published on

புதுடெல்லி,

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிதி முறைகே டுகள் மற்றும் வங்கிக்கடன் மோசடி புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரூ.1,200 கோடி சொத்துகளை முடக்கி உள்ளது.இந்த புகார்கள் தொடர்பாக கடந்த ஆண்டு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அவருடைய மனைவி டினா அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. டினா அம்பானியிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.இதையடுத்து, 17-ந் தேதி ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. மறுநாள் (18-ந் தேதி) ஆஜராக அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com