ஜார்க்கண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் - 3 நக்சல்கள் சுட்டுக்கொலை


ஜார்க்கண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் - 3 நக்சல்கள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 Sept 2025 11:45 AM IST (Updated: 15 Sept 2025 2:00 PM IST)
t-max-icont-min-icon

பண்டித்ரி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள கோர்ஹார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பண்டித்ரி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சல்களில் ஒருவரான சகாதேவ் சோரன் என்பவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த பண்டித்ரி வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 More update

Next Story