மும்பையில் 57 மாடிகள் கட்டிடத்தில் தீ விபத்து

நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை,
மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்தில் பலரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அடுக்குமாடி கட்டிடத்தின் 42-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயினால் அங்கு புகை சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்தவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்,
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story






