பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிர்ச்சேதம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் பிரதமர் தலா ரூ.2 லட்சம் நிதிஉதவி

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், 17 பேர் பலியானார்கள். 30-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிர்ச்சேதம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் பிரதமர் தலா ரூ.2 லட்சம் நிதிஉதவி
Published on

புதுடெல்லி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அச்சன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், 17 பேர் பலியானார்கள். 30-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தநிலையில், பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலர் பலியாகி இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், பலியானோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் பலர் ஆலைக்குள் சிக்கி இருப்பதாக வெளியாகும் தகவல்கள், நெஞ்சை கசக்கிப் பிழிகின்றன. உடனடியாக மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com