குஜராத்: மரத்தின் மீது கார் மோதி கோர விபத்து - 3 பேர் பலி


குஜராத்: மரத்தின் மீது கார் மோதி கோர விபத்து - 3 பேர் பலி
x

கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர்.

பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story