ஏ.ஐ. மாற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர் மோடி பதிவு

டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
ஏ.ஐ. மாற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர் மோடி பதிவு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

”உலகை ஒன்றிணைத்து ஏ.ஐ. பற்றி விவாதிக்க இந்தியா, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை நடத்துகிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு வரும் உலகத்தலைவர்கள், தொழில்துறை தலை வர்கள், புதுமைப்பித்தர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

இன்று சுகாதாரம், கல்வி, விவசாயம், நிர்வாகம் மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட பல துறைகளை ஏ.ஐ. மாற்றி வருகிறது. ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு, புதுமை, ஒத்துழைப்பு, பொறுப்பான பயன்பாடு மற்றும் ஏ.ஐ.யின் பல்வேறு அம்சங்கள் குறித்த உலகளாவிய விவாதத்தை வளப்படுத்தும். உச்சி மாநாட்டின் முடிவுகள் முற்போக்கான, புதுமையான மற்றும் வாய்ப்பு சார்ந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு நன்றி. நமது நாடு ஏ.ஐ. மாற்றத்தில் முன் னணியில் உள்ளது. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு முதல் துடிப்பான 'ஸ்டார்ட்-அப்' சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அதிநவீன ஆராய்ச்சி வரை, ஏ.ஐ.யில் நமது முன்னேற்றங்கள் லட்சியம் மற்றும் பொறுப்பு இரண்டையும் பிரதிபலிக்கின்றன.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com