வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்திய இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்

விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், திறன்படைத்த தொழிலாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை இது திறக்கும்.
வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்திய இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்:  பியூஷ் கோயல்
Published on

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். இதற்கு இந்திய தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார் என்றும் ரஷியாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அறிவித்துள்ள டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமையாக உள்ளது என்றும் கூறினார்.

Also Read
இந்தியா-நார்வே இடையே எரிசக்தி, ஏ.ஐ. பிரிவில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புதல்
வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்திய இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்:  பியூஷ் கோயல்

இதுபற்றி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறும்போது, இந்த குறிப்பிடத்தக்க வர்த்தக ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி, டிரம்ப் மற்றும் இந்திய, அமெரிக்க மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

பகிரப்பட்ட வளங்களுக்காக இணைந்து பணியாற்றும் இரண்டு ஒத்த மனமுடைய, சிறந்த முறையில் வர்த்தகம் செய்யும் ஜனநாயக நாடுகளின் ஆற்றலை இது பிரதிபலிக்கிறது என்றார். விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், திறன்படைத்த தொழிலாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை இது திறக்கும்.

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா தொழில்நுட்ப வசதிகளை பெற உதவும். இது, ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்றில்லாமல், இரு நாட்டு உறவுகளை மறுவடிவமைப்பு செய்யும் ஒரு வரலாற்று திருப்புமுனை ஆகும். 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான நம்முடைய பயணம் இதனால் விரைவுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com