அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்; நிர்மலா சீதாராமன்

இந்த வரிக்குறைப்பால் உலகின் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளும் பலனடையும் என்று அவர் கூறினார்
அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்; நிர்மலா சீதாராமன்
Published on

டெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்திருந்தார். இதனால், இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

அதேவேளை, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்துள்ளதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியாவில் உற்பத்தை செய்யப்படும் பொட்ருகளுக்கு நல்ல செய்தி. அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்

இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரிக்குறைப்பால் உலகின் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளும் பலனடையும்’

என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com