இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும்:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்
Published on

புதுடெல்லி,

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். இதற்கு இந்திய தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார் என்றும் ரஷியாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அறிவித்துள்ள டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமையாக உள்ளது என்றும் கூறினார்.


இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும்:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்
மராட்டியத்தில் கொடூரம்: தேர்தலில் போட்டியிட பெற்ற மகளை கொலை செய்த தந்தை

இதுபற்றி மத்திய வெளிவிவகார துறைக்கான மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, இந்த ஒப்பந்தம் நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதனுடன், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் முதன்மையான மேக் இன் இந்தியா திட்ட பணியை வலுப்படுத்தும் என கூறினார். டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு தன்னுடைய பாராட்டுகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com