கேரளாவில் பிறந்த அனைவருக்கும் தனி குடியுரிமை அடையாள அட்டை: மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

கேரளாவில் பிறந்த ஒருவருக்கு கேரளீயன் என்ற குடியுரிமை அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் பிறந்த அனைவருக்கும் தனி குடியுரிமை அடையாள அட்டை: மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து முதல்-மந்திரி அலுவலக செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கேரளாவில் பிறந்த ஒருவருக்கு கேரளீயன் என்ற குடியுரிமை அடையாள அட்டை வழங்கப்படும். இதற்காக ஏற்கனவே பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படும். இதை பெற்ற பிறகு வெளிநாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்களது அடையாள அட்டை ரத்து செய்யப்படும்.

அரசு சேவைகளில், பல்வேறு துறைகளில் தேவைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் அடையாள ஆவணங்களுடன் கேரளீயன் அடையாள அட்டையையும் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com