மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்

வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்
Published on

டெல்லி,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார்.

அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, வரியை குறைப்பது, வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ருபியோவை ஜெய்சங்கர் சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com