உத்தர பிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர் அருகே எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
Published on

இந்த சம்பவத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் கூடுதலான பயணிகள் காயமடைந்துள்ளனர் என அரசு தகவல் அறிவிக்கின்றது. இதனை தொடர்ந்து உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டு உள்ளனர். உள்ளூர் மக்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத தடுப்பு அணியினரும் தீவிரவாதிகளின் சதி வேலையா? என விசாரணை செய்து வருகின்றனர்.

ரெயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3.5 லட்சமும் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com