2019-ல் மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்: சந்திரபாபு நாயுடு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் ‘கிங் மேக்கர்’களாக இருந்து மத்திய அரசை தீர்மானிக்கும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu
2019-ல் மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்: சந்திரபாபு நாயுடு
Published on

விஜயவாடா,

2019-ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பாஜகவுக்கு எதிராக பலமான அணியை உருவாக்க மாநில கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதற்கு அடித்தளம் அமைக்கும் வண்ணம் கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி தனது பதவியேற்பு விழாவுக்கு பல மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று பாஜவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் பலத்தை நிரூபிக்க பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இது சிறப்பான நிகழ்வாக கருதப்பட்டது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் கிங் மேக்கர்களாக இருந்து மத்திய அரசை தீர்மானிக்கும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

மேலும் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதிய ஜனதாவை வீழ்த்தும். நாட்டில் பொருளாதாரத்திற்கு நன்மை செய்யும் என நினைத்து பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தேன், ஆனால் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆந்திராவில் பாஜக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகளை உருவாக்க முயல்கிறது. மேலும் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com