

காந்தி நகர்,
குவைத் நாட்டில் இருந்து இன்று அதிகாலை இண்டிகோ விமானம் டெல்லிக்கு வந்துகொண்டிருந்தது. விமானத்தில் 180 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், விமானம் இந்திய வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என்று எழுதப்பட்டிருந்த பேப்பரை ஒரு பயணி கண்டுபிடித்துள்ளார். இது குறித்து உடனடியாக அந்த பயணி விமான ஊழியர்களிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து விமான ஊழியர்கள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விமானத்தை குஜராத்தின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் விமானிகள் அவசர அவசரமாக தரையிறக்கினர்.
இதனை தொடர்ந்து விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.