தொழில்நுட்பக்கோளாறு: இண்டிகோ விமானம் டெல்லியில் அவசர தரையிறக்கம்


தொழில்நுட்பக்கோளாறு:  இண்டிகோ விமானம் டெல்லியில் அவசர தரையிறக்கம்
x

டெல்லியில் தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு இன்று காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது.இந்தநிலையில் லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மீண்டும் டெல்லிக்கே திருப்பிவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விபத்துக்கு பிறகு கடந்த 7 நாட்களில் அதிக அளவிலான இந்திய விமானங்கள் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்படுவது பயணிகளிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story