மத்திய பிரதேசம்: காணாமல் போன பெண்ணை தேட சென்றபோது விபத்து - 3 போலீசார் பலி; 2 பேர் மாயம்

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பாய்ந்த காரில் இருந்த போலீசாரை தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உஜ்ஜைன்,
மத்திய பிரதேசத்தில் காணாமல் போன பெண் ஒருவரை தேடுவதற்காக போலீசார் கார் ஒன்றில் புறப்பட்டு சென்றனர். உஜ்ஜைன் மாவட்டத்தில் உன்ஹெல் காவல் நிலைய அதிகாரிகளான அவர்கள் ஷிப்ரா ஆற்று பாலத்தில் சென்றபோது, அவர்களுடைய வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரில் பாய்ந்தது.
ஆற்றில் வெள்ளம் ஓடி கொண்டிருந்தது. இதனால், அவர்களால் உடனே நீந்தி வெளியே வர முடியவில்லை. இந்த சம்பவத்தில் சிக்கி 3 போலீசார் பலியானார்கள். அவர்களின் உடல்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. அவர்களில் காவல் ஆய்வாளர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
2 போலீஸ் அதிகாரிகளை காணவில்லை. அவர்களை அதிகாலை 2.30 மணி வரை தேடினர். இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், தேடுதல் பணியை நிறுத்தி விட்டு திரும்பினர். இதன்பின் இன்று காலை முதல் மீண்டும் தேடும் பணி தொடர்கிறது.
இதற்காக, தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்டோர் படகுகள், டிரோன்கள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் சென்று காணாமல் போன 2 போலீசாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






