

மும்பை,
மராட்டிய மாநிலம் பிட் மாவட்டம் கைஜ் கிராத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்பு தோட்டத்தில் பிரஹானி மாவட்டத்தை சேர்ந்த நபர் வேலை செய்து வந்தார். அந்த நபருக்கு மனைவி, மகள் (வயது 13) உள்ளனர். அந்த நபர் கரும்பு தோட்டத்திற்கு அருகே உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த சுராஜ் ஹரத் என்ற இளைஞர் கரும்பு தோட்ட தொழிலாளியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி மற்றும் கடந்த 8ம் தேதி ஆகிய 2 முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் சென்று சிறுமியை சுராஜ் மிரட்டியுள்ளார்.
அதேவேளை, சுராஜ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்பட்டையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.