மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 16 பேர் பலியான சோகம்

சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மிக குறுகிய பகுதியில் சுரங்க பணியில் ஈடுபட்டு இருந்தபோது, தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஷில்லாங்,

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சந்தேகத்திற்குரிய வகையிலான இந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பலர் மிக குறுகிய பகுதியில் சுரங்க பணியில் ஈடுபட்டு இருந்தபோது, வெடிவிபத்து ஏற்பட்டதில் அவர்கள் சிக்கி கொண்டனர்.

நுழைவு பகுதியில் பாறைகள் விழுந்து மூடியதில், உள்ளே இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை. இதில் பலர் உயிரிழந்தனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு விகாஸ் குமார் கூறும்போது, 16 உடல்களை இதுவரை மீட்டுள்ளோம். ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளார்.

தொழிலாளர்கள் பலர் உள்ளே சிக்கி கொண்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் மற்றும் அரசு நிர்வாகத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com