

புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசி இருப்பதாவது;
”மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி மந்திரி இவரே. இது, இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைக்குரிய விஷயமாகப் பதியப்படும். “
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 10 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, ப. சிதம்பரம், ஒன்பது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார், ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.