ரூபாய் மதிப்பை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்

வேலை வாய்ப்பு நிலவரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளன என்று ப. சிதம்பரம் கூறினார்.
 ரூபாய் மதிப்பை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்
Published on

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த பல அறிவிப்புகள் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பட்ஜெட் குறித்து கூறியிருப்பதாவது:

ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கியமான துறைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் செலவீனம் குறைந்துள்ளது. மத்திய அரசின் மூலதனச்செலவு குறைந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.17 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு நிலவரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளன. நிதிப்பற்றாக்குறை சொற்ப அளவாக 0.1 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார வியூகமாக மத்திய பட்ஜெட் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com