மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான வரி குறைப்பு இல்லை: நகை பிரியர்களுக்கு ஏமாற்றம்

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கவரி குறைக்கப்படவில்லை. அது பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை.
 

மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான வரி குறைப்பு இல்லை: நகை பிரியர்களுக்கு ஏமாற்றம்
Published on

புதுடெல்லி,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த ஒரு மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.20 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.9,520 உயர்த்தப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.57,200-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.1,19,200-க்கு விற்கப்படுகிறது. ஒரே ஆண்டில் தங்கம் விலை 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

இதையடுத்து மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி குறைக்கப்படலாம், அதனால் தங்கம் விலையும் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கவரி குறைக்கப்படவில்லை. அது பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com