கேரளாவில் மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற முதியவருக்கு தூக்கு


கேரளாவில் மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற முதியவருக்கு தூக்கு
x
தினத்தந்தி 31 Oct 2025 11:50 AM IST (Updated: 31 Oct 2025 12:19 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம், சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம், சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது (வயது82). இவர் சொத்து பிரச்சினை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 19-ந்தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது மகன் முகமது பைசல்(45), மருமகள் ஷீபா(40), பேத்திகள் மேக்ரின்(10), அஸ்னா(13) ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதில் அவர்கள் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடுபுழா முட்டம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கொலையாளி ஹமீதுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

1 More update

Next Story