தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு; கேரளாவில் நள்ளிரவு முதல் பஸ்கள் ஓடாது என அறிவிப்பு

தேசிய அளவிலான 24 மணிநேர பொது வேலை நிறுத்தத்தில் கேரளாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும்.
தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு; கேரளாவில் நள்ளிரவு முதல் பஸ்கள் ஓடாது என அறிவிப்பு
Published on

திருவனந்தபுரம்,

தொழிலாளர் வரைமுறை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நாளை (12-ந்தேதி) தேசிய அளவிலான 24 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

Also Read
டி20 ஆல்-ரவுண்டர் தர வரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த ஜிம்பாப்வே கேப்டன்
தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு; கேரளாவில் நள்ளிரவு முதல் பஸ்கள் ஓடாது என அறிவிப்பு

இதுகுறித்து கேரள மாநில ஒருங்கிணைந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, மத்திய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தேசிய அளவில் 24 மணிநேர பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இதில் கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும். அரசு, தனியார் பஸ்கள், கார், ஆட்டோ, லாரிகள் உள்பட எந்த வாகனங்களும் ஓடாது. மால்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வங்கி, இன்சூரன்ஸ், ரெயில்வே, துறைமுகம், ராணுவம், விமான போக்குவரத்து நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com