எங்களிடம் இருந்து நீங்கள் தப்ப முடியாது -ராகுல் காந்தி


எங்களிடம் இருந்து நீங்கள் தப்ப முடியாது -ராகுல் காந்தி
x
தினத்தந்தி 8 Aug 2025 11:16 AM IST (Updated: 8 Aug 2025 11:39 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன.

இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

வாக்கு திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக செய்யப்படும் ஒரு பெரிய மோசடி. ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் தப்ப முடியாது. இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம்.

தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார். உயர் பதவியில் இருந்தாலும் சரி கடைநிலையில் பணியாற்றினாலும் சரி என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story