

குல்லு,
இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், அங்குள்ள முக்கிய சாலைகள் பல உறைபனியால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக அடல் சுரங்கப்பாதையின் தெற்கு பகுதி மற்றும் மணாலியில் உள்ள சோலங் நல்லா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நடு வழியில் சிக்கி கொண்டதால் 500 க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று சிக்கி தவித்துள்ள பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மீட்பு வாகனங்களின் உதவியுடன் பயணிகளை பத்திரமாக மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.