

புதுடெல்லி
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழு லஷ்கர்-இ-தெய்பா அமைப்புடன் சேர்ந்து 2 புதிய பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு உருவாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிதாக அமைக்கப்பட்ட குழு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டி.ஆர்.எஃப்) மற்றும் தெஹ்ரீக்-இ-மிலத்-இ-இஸ்லாமி (டி.எம்.ஐ) ஆகியவை ஆகும்அதில் தி ரெசிஸ்டென்ஸ் பிரான்ட் அமைப்பின் கமாண்டராக அபு அனாஸ் என்பவர் செயல்படுவதும் தெரியவந்துள்ளது.
புதிய பயங்கரவாத குழு தெஹ்ரீக்-இ-மிலாத்-இ-இஸ்லாமி (டி.எம்.ஐ) தளபதி நயீம் ஃபிர்தவுஸ் காஷ்மீரில் செயல்படும் அனைத்து போர்க்குணமிக்க குழுக்களையும் ஒன்றிணைக்குமாறு கேட்டு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு குழுக்களும் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் தீவிரமாக செயல்படுகின்றன என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.