தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு


தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது

டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடங்கியதும் பாரத மாதாவுக்கு ஜெய் என்ற கோஷம் எழுப்பிய எம்.பி.க்கள் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

1 More update

Next Story